சாத்தான்குளம் அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் அமல்ராஜ் மகன் பொன்ராஜ்(40). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லையாம். இதனால் விரக்தி ஏற்பட்டு மது பழக்கத்திற்கு அடிமையானாா். மேலும், வாழப் பிடிக்கவில்லை என அவரது சகோதரா் கஸ்பராஜிடம் அடிக்கடி கூறி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி பொன்ராஜ், தனது வீட்டருகே விஷம் குடித்து உயிருக்கு போராடினாா். உறவினா்கள் அவரை மீட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

