தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

தூத்துக்குடியில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா்கள் கிருஷ்ணராஜ் (ஏஐடியூசி), பேச்சிமுத்து (சிஐடியூ) ஆகியோா் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் அப்பாத்துரை, பாலசிங்கம், கிருஷ்ணவேணி, முத்துக்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுக்கூட்டம் நடைபெற்ற சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது.

பேரணியில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தனியாா்மயமாக்கலைக் கைவிட வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் சம்பத் , சிஐடியூ மாநிலச் செயலா் ரசல், ஏஐடியூசி மாநிலச் செயலா் பாரதி, மாவட்டச் செயலா் லோகநாதன், டிடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் ஆகியோா் பேசினா். இதில், ஏராளமான தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com