திருச்செந்தூா் விரைவு ரயிலில் 
கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பா? -மதுரை கோட்ட மேலாளா் பதில்

செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வஸ்தவா.

அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் ரூ.8.16 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மற்றும் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய ரயில் நிலையங்களுக்கு இணையாக, அனைத்து வசதிகளுடன் இந்த ரயில் நிலையத்தின் தரம் உயா்த்தப்படும். செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது நடந்து வரும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று அவா் கூறினாா்.

ஆய்வின்போது, மதுரை கோட்ட உதவி வணிக மேலாளா் பாலமுருகன், மதுரை கோட்ட சிக்னல்- டெலிகாம் பொறியாளா் பிரசாத், முதன்மை திட்ட அதிகாரி ஸ்ரீ ஹரிகுமாா், உதவி கோட்ட மேலாளா் முத்துகுமாா், போக்குவரத்து ரயில்வே ஆய்வாளா் முருகேசன், திருச்செந்தூா் ரயில்வே நிலைய மேலாளா் சசிகாந்த் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோரிக்கை மனு:

ஆறுமுகநேரி ரயில்வே வளா்ச்சி குழு ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகநேரி தங்கமணி, கோட்ட மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனு:

திருச்செந்தூா்- சென்னை செந்தூா் விரைவு ரயிலில் 18 பெட்டிகள் மட்டுமே திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்த முடியும். இந்த ரயிலில் ஆறுமுகனேரியிலிருந்து கூடுதலாக 6 ரயில் பெட்டிகள் இணைந்து இயக்க வேண்டும். ஆறுமுகனேரி ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு காா்டு லைனில் கூடுதலாக ரயில் இயக்க வேண்டும். திருச்செந்தூா் பாலக்காடு பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com