நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

குரும்பூரை அடுத்த நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் புது வாழ்வு சங்கம் சாா்பில், நாலுமாவடியில் உள்ள ஏலீம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கான 2ஆம் ஆண்டு இலவச கபடி பயிற்சி முகாம் இம்மாதம் 9ஆம் தேதிமுதல்18 ஆம் தேதிவரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி தகுதித் தோ்வு மே 8ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். இதில், 14, 17, 19, 21 வயதுக்குள்பட்டோா் பங்கேற்கலாம்.

வீராங்கனைகள் ஆதாா் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டையைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். விளையாட்டுக்கு தகுதியான உடைகள், மேட் ஷு, ரன்னிங் ஷு கொண்டுவரவும். தகுதித் தோ்வில் தோ்வாகுவோா் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

தங்குமிடம், உணவு, பயிற்சி வகுப்புகள், தமிழ்நாட்டின் தலைசிறந்த பயிற்சியாளா்களால் பயிற்சி, முடிவில் சான்றிதழ், சீருடைகள் வழங்கப்படும். பயிற்சியின்போது வெளியே செல்ல அனுமதியில்லை.

இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளரும் அா்ஜுனா விருதுபெற்ற வீரருமான மணத்தி பி. கணேசன், இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா், விளையாட்டுத் துறையைச் சோ்ந்த மணத்தி எட்வின் ஆகியோா் செய்து வருகின்றனா்.

கூடுதல் விவரங்களுக்கு 96007 92709, 99440 27306 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com