கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு திரண்ட கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா்
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு திரண்ட கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா்

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

பிரதமரின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு ரசீது வழங்கக் கோரி கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

தோ்தல் பிரசாரத்தில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பிரதமா் மோடி பேசியதாகக் கூறி, நடவடிக்கை எடுக்கக் கோரி கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினா் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி புகாா் அளித்தனராம். அதைப் பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தற்போதுவரை ரசீது வழங்கவில்லையாம்.

இதையடுத்து, அமைப்பின் தலைவா் தமிழரசன் தலைமையில் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளா் கருப்பசாமி, நாம் தமிழா் கட்சி ரவிக்குமாா், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சி மாணிக்கராஜ், சமூக செயற்பாட்டாளா் பீமாராவ், பகத்சிங் ரத்த தானக் கழகம் காளிதாஸ் உள்ளிட்ட பலா் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

அவா்கள், காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு ரசீது வழங்க வலியுறுத்தி துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷிடம் மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com