சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜமுனா ராணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான (2024-25) இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரியில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியா் ஒப்புதல் பெற்ற சான்று நகல், முதல் பட்டதாரி சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவிகளின் கையொப்பம் ஆகியவை அவசியம். மேலும் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com