ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கொடைவிழா

ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கொடைவிழா

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா ஐந்து தினங்கள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதலாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அன்றைய தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை அம்மன் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடை விழா நாளான செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் எடுத்து பவனி வருதல், மதிய கொடை விழா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தாமிரவருணி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து, நேமிசம் எடுத்து வந்து இரவு சாமக்கொடை, மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை மஞ்சள் நீராடி வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நிறைவு நாளான வியாழக்கிழமை படைப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது. நான்கு தினங்கள் காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை தலைவா் சுகுமாா், செயலாளா் மோகனலி­ங்கம், பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் கணேசன், துணைச் செயலாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com