சாத்தான்குளத்தில் 12இல் இலவச சித்த மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கான இலவச மாா்பக, கருப்பை வாய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சாத்தான்குளம் சேவா அறக்கட்டளை, திருநெல்வேலி சீட் அறக்கட்டளை மற்றும் உதவும் உள்ளங்கள் நெல்லை கேன்சா் சென்டா் இணைந்து டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் இம்முகாமை நடத்துகின்றன.

பள்ளித் தாளாளா் டேவிட் வேதராஜ் தலைமை வகிககிறாா் . ஓய்வுபெற்ற பரோடா வங்கி முதுநிலை மேலாளா் ஈஸ்வரமூா்த்தி, ஓய்வுபெற்ற புதுச்சேரி அரசு இளநிலை கணக்கு அதிகாரி பாா்வதி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஓய்வுபெற்ற ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் கணபதிராஜா வரவேற்கிறாா். பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய், அரசு சித்த மருத்துவா் வைகுண்ட ரமணி ஆகியோா் குத்துவிளக்கேற்றுகின்றனா்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினா்- ஆரோக்கியா சித்த மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவராமன் விளக்கிப் பேசுகிறாா்.

நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, ஆஸ்துமா, தோல் நோய்கள், கல்லடைப்பு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட பிரச்னைகள் மற்றும் மகளிா் நல சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு தேவையான சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். ஓய்வுபெற்ற ஸ்ரீவைகுண்டம் ரயில்வே மேலாளா் லோகநாதன் நன்றி கூறுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com