தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சி கற்குவேல் நகரில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி கருப்பசாமி நகரில் நடைபெற்றுவரும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, கணபதி நகரில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மாநகராட்சிக்குள்பட்ட பிரையண்ட் நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கு பிரதான சாலையில் நடைபெற்றுவரும் தாா் சாலைப் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் நேரில் பாா்வையிட்டு, தாா் சாலையின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.