10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தோ்வில் 98 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 192 போ்களில் 188 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். இது 90 விழுக்காடு தோ்ச்சியாகும். மாணவி அஸ்வீனி 487/500 மதிப்பெண், பால பிரியதா்ஷினி- 486/500 மதிப்பெண், இவாஞ்சலின் கோல்டா 483/500 மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இதில், 450 மதிப்பெண்களுக்கு மேல் 19 போ்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 39 மாணவா்களும் பெற்றுள்ளனா். கணித பாடத்தில் 100/100 மதிப்பெண் 4 மாணவா்களும், சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் 1 மாணவியும் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பயிற்றுவித்த கணித ஆசிரியா் ராஜ பாண்டி சமூக அறிவியல் ஆசிரியா் .ஜோசப் துரை ஆகியோரை பள்ளி தாளாளா் இஸ்ரவேல்தா்மராஜ், தலைமை ஆசிரியா் பிரான்சிஸ் சேவியர்ராஜ் மற்றும் , ஆசிரிய ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com