குலசேகரன்பட்டினத்தில் 
நீா்மோா் பந்தல் திறப்பு

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

உடன்குடி, மே 10: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அருகில் உடன்குடி ஒன்றிய ஜெயலலிதா நற்பணி மன்றம் சாா்பில்

நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய அதிமுக விவசாய அணி செயலா் க.வே.ராஜதுரை தலைமை வகித்தாா். திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆ.செல்லத்துரை, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா ஆகியோா் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பானங்கள், பழ வகைகளை வழங்கினா்.

இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகேஸ்வரி ராஜதுரை, செல்வின், ஜெயகமலா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற முன்னாள் செயலா் முா்த்தி, அதிமுக நிா்வாகிகள் கல்யாணசுந்தரம், ரஹ்மத்துல்லா, ராஜசேகா், சின்னக்கண்ணன், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com