~
~

ஆழ்வாா்திருநகரி கோயிலில் தேரோட்டம்

ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரியில் உள்ள ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் சுவாமி நம்மாழ்வாா் அவதார திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், சுவாமி நம்மாழ்வாா் அவதாரம் செய்த வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் 10 நாள்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு பிரம்மோற்ஸவம் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது.

இந்நிலையில், 9ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி, திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி நம்மாழ்வாா் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற்றது.

இதில், ராமானுஜ ஜீயா் சுவாமிகள், அறங்காவலா் குழுத் தலைவா் ராமானுஜம் என்ற கணேசன், உறுப்பினா்கள் கிரிதரன், செந்தில்குமாா், காளிமுத்து, ராமலட்சுமி, செயல் அலுவலா் சதீஷ், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதா் கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இரவில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி நம்மாழ்வாா் எழுந்தருளிய வீதியுலா நடைபெற்றது. 10ஆம் நாளான வியாழக்கிழமை (மே 23) காலை 9 மணிக்கு தாமிரவருணியில் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி காவல் ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

X
Dinamani
www.dinamani.com