புதுகை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

புதுக்கோட்டை, ஜூலை 16:  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசுக்  கல்வி நிறுவனங்களில் கல்வி வளர்ச்சி நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.   புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேனிலைப் பள்

புதுக்கோட்டை, ஜூலை 16:  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசுக்  கல்வி நிறுவனங்களில் கல்வி வளர்ச்சி நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு, பள்ளி முதல்வர் எஸ். ராஜசேகர் தலைமை வகித்தார். துணை முதல்வர் நா. முத்துபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். போட்டிகளில் வென்றோருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.  முன்னதாக, துணை முதல்வர் ப. முத்துக்குமரன் வரவேற்றார். ஆசிரியர் அந்தோணிலூயிஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். நிறைவில், ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

  இதேபோல, கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் த. ராமமூர்த்தி, திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த. சிவராமகிருஷ்ணன், குழிபிறை திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் சின்னையா, குளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ப. மாணிக்கம், நார்த்தாமலை பி.எஸ்.கே. மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் பி. கருப்பையா, திருமயம் அருகேயுள்ள வி. லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் வை. மெய்யம்மை, புதுகை திருஇருதய மகளிர் மேனிலைப் பள்ளியில் தேசியத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ச. ஆரோக்கியசாமி, ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் அ. பானுமதி, உப்பிலிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஜி. சத்தியமோகன், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஏ. வைஜயந்திபாலா, கல்லாக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில்,  தலைமையாசிரியர் ந. திருநாவுக்கரசு, காந்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ரெ. பரமசிவம்,  கொடும்பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் சி. சுப்பிரமணியன், கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் எம். சேகர், சத்தியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் என். சண்முகம், மண்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். எலிசபெத், மலைக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். ஜெகந்நாதன், மருதாந்தலை அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் சி. ராஜேந்திரன், வடவாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். மீனாம்பாள், லெம்பலக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். விஜயன், புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் அ. ஆறுமுகம், ராப்பூசல் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் மு. அடைக்கம்மை, மண்ணவேலாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆ. பெட்லராணி, வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் என். நடராஜன், வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். மோகன்,  மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஏ. குணசேகரன், புதுகை ராணியார் மகளிர் மேனிலைப் பள்ளியில்  தலைமையாசிரியர் ஆர். போஸ்,  பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆர். கனகசபாபதி, கீரனூரில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மா. வேலாயுதம், மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் வனஜாசலோமி, அன்னவாசல் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர. சரஸ்வதி, இலுப்பூர் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் என். லட்சுமி, காவேரி நகர் மேல்நிலைப் பள்ளியில்,  தலைமையாசிரியர் எஸ். சிட்டு, விராலிமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆர். சோமசுந்தரம், அண்டக்குளம் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஜி. பாரதிவிவேகானந்தன், மேலத்தானியம் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ம. மகேந்திரன், ஏ. மாத்தூர் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் தி.சா. கிருஷ்ணன். பரம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் க. கலைக்குமார், சந்தைப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கே. லலிதா ஆகியோர் தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

கந்தர்வகோட்டை:  கந்தர்வகோட்டை பகுதியில் பல்வேறு பள்ளிகளில்  முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

   தெற்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். ஜேம்ஸ் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எம். ஜோசப் முன்னிலை வைத்தார். மாணவர்களுக்கு காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில், அந்த அமைப்பின் தலைவர் தீ. சிவா சீருடைகளை வழங்கினார்.  முன்னதாக, பள்ளித்  தலைமை ஆசிரியர் அ. பழனியாண்டி வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் ஆர். மீனாள், எஸ். மாலதி, நற்பணி மன்றச் செயலர் எம். கணேசன், பொருளர் எம். பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 கோமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எம். ஜோசப் தலைமை வைத்தார். பள்ளியின்  தலைமை ஆசிரியர் பி. ஆனந்த்ராஜ், உதவி ஆசிரியர் பி. ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com