"தொன்மை மட்டுமல்ல திருக்குறளின் பெருமை'

புதுக்கோட்டை, ஜூன் 24: தொன்மை மட்டுமல்ல திருக்குறளின் பெருமை என்றார் கவிஞர் நா. முத்துநிலவன்.  புதுக்கோட்டையில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மே தின சிறப்பு சொற்பொழிவுக் கூட்டத்

புதுக்கோட்டை, ஜூன் 24: தொன்மை மட்டுமல்ல திருக்குறளின் பெருமை என்றார் கவிஞர் நா. முத்துநிலவன்.

 புதுக்கோட்டையில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மே தின சிறப்பு சொற்பொழிவுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

 அடுத்தவருக்கு உதவுவதால் துன்பம் வருமெனில், எந்தத் தியாகம் செய்தும் அந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் எழுதிய ஒப்புரவு அதிகாரக் குறளின் பொருளை, கிட்டத்தட்ட அதே வாசகங்களோடு தமது பள்ளியிறுதி வகுப்பின்போது தரப்பட்ட கட்டுரையில் எழுதியவர்தான் காரல்மார்க்ஸ். இவ்வாறு இந்த இருபெரும் உலக மேதைகள் ஒன்று சேரும்போதுதான் மனித வாழ்வின் நோக்கம் பற்றிய மகத்தான கருத்துகள் நமக்குக் கிடைத்தன.

 இலக்கியத் தரம் மிகுந்த வள்ளுவரின் காமத்துப்பால் காதலின் நுட்பத்தைக் கூறுவதாக உள்ளதை ஏனோ நமது பள்ளி,கல்லூரிப் பாட நூல்களில் வைக்கப்படுவதில்லை.

 வள்ளுவர் மலரினும் மெல்லிது காமம் என்று பாடிய உண்மையான காதலையும் நாம் இளைஞர் அறியத் தருவதில்லை என்பது நமது சமுதாயத்தில் நாம் செய்யும் கல்விக் குழப்பம். காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் உள்ள 250 குறள்களில் எந்த இடத்திலும் ஆபாசமில்லை, மாறாக இயல்பான மனித உணர்வுகளே இலக்கிய நயத்தோடு உள்ளன. இந்தக் காதலை வாழ்வில் கண்டோர் காரல்மார்க்சும் அவரது காதல் மனைவி ஜென்னியும்தான். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து மார்க்சோடு வறுமையிலும் காதல் வாழ்வை ஜென்னி நடத்தியது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

 அதேபோல உலகப் புகழ்பெற்ற நட்பு மார்க்ஸ் - ஏங்கெல்சின் வாழ்க்கையில் பதிவானது. ஏங்கெல்ஸ் இல்லையென்றால் மார்க்சின் உலகப் புகழ்பெற்ற மூலதனம் நூல் வெளிவந்திருக்க முடியாது என்பதை மார்க்சே சொல்கிறார். மார்க்ஸ் இறந்த பிறகுதான் அந்த நூலின் 2,3-வது பாகங்கள் ஏங்கெல்சின் பெருமுயற்சியால் வெளிவந்தன. இவ்வாறு, வள்ளுவர் வகுத்த நட்பு அதிகாரத்தின் இலக்கியமாகத் திகழ்ந்தவர்கள் மார்க்சும், ஏங்கெல்சும். 1948-ல் மார்க்சும் ஏங்கெல்சும் வெளியிட்ட உலகப் புகழ் பெற்ற அறிக்கையிலேயே தேசிய இலக்கியங்களிலிருந்து உலக இலக்கியம் உருவாகும் என்பதற்கேற்ப தொன்மையான உலக இலக்கியமாகத் தகுதி பெற்ற திருக்குறளை தேசிய இலக்கியமாகக்கூட நம் அரசு ஏற்காதது வருத்தத்துக்குரியது என்றார் முத்து நிலவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com