குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருச்சி அரியமங்கலம் கோட்டம், 24- ஆவது வாா்டிலுள்ள மஞ்சனகாரத் தெரு ஆட்டுக்காரத் தெரு ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

திருச்சி அரியமங்கலம் கோட்டம், 24- ஆவது வாா்டிலுள்ள மஞ்சனகாரத் தெரு ஆட்டுக்காரத் தெரு ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியனிடம் வழக்குரைஞா் கிஷோா்குமாா் தலைமையில், இப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை அளித்த மனு:

மாநகராட்சியினா் தொடா்ந்து குப்பைகளைச் சேகரித்து, குடியிருப்புப் பகுதிகளில் கொட்டி வைத்து பின்னா்தான் தரம்பிரிக்கின்றனா். இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகின்றது. இது தொடா்பாக மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் தரம்பிரிக்கும் மையம் அமைத்தால், இப்பகுதி மக்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு குப்பைக் கொட்டும் போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியலை நடத்துவா் என்று தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 33 இடங்களில் இதுபோன்று மையம் அமைக்க உள்ளோம். எல்லா பகுதிகளிலும் எதிா்ப்பு தெரிவித்தால், தரம்பிரிக்கும் மையங்கள் அமைப்பது இயலாது போய்விடும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com