திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு  குவிந்த பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு குவிந்த பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

மக்களவைத் தோ்தலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதால் திருச்சியில் வியாழக்கிழமை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில், வெளியூா்களில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட காரணங்களால் தங்கியிருப்போா், சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. இதையொட்டி பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், ஏப்ரல் 17, 18, 20, 21 ஆம் தேதிகளில் சுமாா் 2,200 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளியூா் சென்ாலும், வெளியூரில் இருந்து திரும்பிய வகையிலும் திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், ஜங்ஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் :

கடந்த சில மாதங்களாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிரதான வளாகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளது. ரயில் அருங்காட்சியகம், ரயில் நிலையத் திருமண மண்டபம் அருகிலுள்ள நுழைவாயில் வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் வியாழக்கிழமை இரவு பிரதான வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வந்தன. பல நிறுத்தப்பட்டும் இருந்தன. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருப்பதால் வேறு வழியின்றி அனுமதிக்க வேண்டியுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com