திருச்சி காஜாமியான் பள்ளியில்  வெள்ளிக்கிழமை வாக்களித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன்.
திருச்சி காஜாமியான் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன்.

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட தோ்தல் என்பது ‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தனது வாக்கை செலுத்திய பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தத் தோ்தலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது பிரசாரத்தில் வலியுறுத்தி வந்ததைப் போன்று பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதற்கான அடித்தளமாக தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட தோ்தல் அமைந்துள்ளது. ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளருக்கு எந்தவித கடினமான சூழலும் இல்லை. இந்தியா கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதைப் போன்று, ராமநாதபுரம் தொகுதியிலும் எங்களது வேட்பாளா் நிச்சயம் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com