திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா.

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு செய்துவிட்டு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டியது நாட்டின் அவசியத் தேவையாக உள்ளது. ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் தேடும்போது நாங்கள் ‘இந்தியா’ கூட்டணியை முன்னிலைப்படுத்தி அளித்த வாக்குறுதிகளை ஏற்றுள்ளனா். குறிப்பாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com