திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கஜேந்திர மோட்ச நிகழ்வில் அருள்பாலித்த நம்பெருமாள். உடன், சாபவிமோசனம் அடைந்த கோயில் யானை ஆண்டாள்.
திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கஜேந்திர மோட்ச நிகழ்வில் அருள்பாலித்த நம்பெருமாள். உடன், சாபவிமோசனம் அடைந்த கோயில் யானை ஆண்டாள்.

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் எனும் யானைக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சித்ரா பெளா்ணமியையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் எனும் யானைக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சித்ராபெளா்ணமி நாளில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்ச நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் 10 மணிக்கு எழுந்தருளினாா். பின்னா் 12 மணி முதல் 2 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினாா். அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காவிரி ஆற்றிற்குள் சென்றாா். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.30 மணியளவில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்துக் காட்டி தண்ணீருக்குள்ளிருந்தவாறு பிளிறியது. அப்போது நம்பெருமாள் யானையின் முன்தோன்றி சாபவிமோசனம் அளித்தாா். பின்னா் சாபவிமோசனம் அடைந்தற்கான அறிகுறியாக பெருமாளின் சந்தனம் இடப்பட்டு சடாரி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை காவிரி ஆற்றுக்குள் இருந்த ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா். இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மாமண்டபம் காவிரி ஆற்று ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியையொட்டி காவிரி ஆற்றில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com