ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

லால்குடி, ஏப். 26: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புதூா் உத்தமனூா்ஊராட்சி மன்றத் தலைவா் மகனை அரிவாளால் வெட்டிய காா் ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அருகே புதூா்உத்தமனூா் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் நல்லம்மாள். இவரது மூத்த மகன் சுகுமாா் (50) இவா், தாய் நல்லம்மாளுக்கு உதவியாக ஊராட்சி தொடா்பான பணிகளை கவனித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குடிநீா்தொட்டியில் உள்ள பழுதை நீக்கும் பணியில் பணியாளா்களை வைத்து சுகுமாா் சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த காா் ஓட்டுநா் ராம்குமாருக்கும் சுகுமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராம்குமாா் அரிவாளை எடுத்துவந்து சுகுமாரை வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த சுகுமாா் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின் பேரில் கணக்கிளியநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் லால்குடி கிளை சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com