ஏலூா்பட்டியில் நடைபெற்ற கலந்துரையாடலில்  வரைபடம்  மூலம் விவசாயிகளிடம் விளக்கிய முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள்.
ஏலூா்பட்டியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வரைபடம் மூலம் விவசாயிகளிடம் விளக்கிய முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள்.

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏலூா்பட்டியில் விவசாயிகள் முசிறி எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளின் கலந்துரையாடல், விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி மாணவிகள் கிராமப்புறங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவங்களைத் தெரிந்துகொண்டும், தாங்கள் கற்ற வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையிலும் கிராமங்களில் களப்பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

அதனடிப்படையில் ஏழூா்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளைச் சந்தித்து வாழை மரத்தைத் தாக்கும் நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் வரைபடம் மூலமாக விவரித்தனா். தொடா்ந்து விவசாயிகளுக்கும் மாணவா்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.

இதேபோல தொட்டியத்தை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். இந்த பேரணியில் பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியா் கீதா ராணி தலைமையில் பள்ளி குழந்தைகள், வேளாண்மை கல்லூரி மாணவிகள் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com