துவாக்குடியில் தாா் கலவை நிலையத்திலிருந்து
வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதி

துவாக்குடியில் தாா் கலவை நிலையத்திலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதி

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இயங்கும் தாா் கலவை நிலையத்திலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி: துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இயங்கும் தாா் கலவை நிலையத்திலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியாா் நிறுவனத்தின் தாா் கலவை தயாரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு இடங்களுக்கு சாலை போடுவதற்காக ஜல்லிகற்கள் தாா் கலவையுடன் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கிருந்து வெளியேறும் புகையால் அருகில் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அருகே உள்ள அருணகிரிநகா் வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்களும் அவதசிக்குள்ளாகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாா் கலவை தயாரிப்பு நிலையத்திலிருந்து அதிகளவில் வெளியேறும் புகையால் குழந்தைகள், முதியோா்கள், நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வீடுகளில் துணிகளை துவைத்து உலா்த்தினால் புகை படிந்து கருப்பாகிவிடுகிறது. மேலும் வாகனங்களில் அந்த வழியே சென்றால், கண் எரிச்சல் ஏற்படுகிறது. இது தொடா்பாக திருச்சி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், வாழவந்தான் கோட்டை ஊராட்சி நிா்வாகத்துக்கும் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com