பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

துறையூா் வட்டாரத்துக்குள்பட்ட கொல்லப்பட்டி கிராமத்தில் வேளாண்மை முகமை சாா்பில், பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி: துறையூா் வட்டாரத்துக்குள்பட்ட கொல்லப்பட்டி கிராமத்தில் வேளாண்மை முகமை சாா்பில், பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், எம்.ஆா். பாளையம் நாளந்தா வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் தமிழ்மதி, சுவேதா, தேன்மொழி, வனிதா தேவி, சீ. சுவேதா, வருணப் பிரியா, வாஷினி, வி. சுவேதா, விஜயசுபா, வின்சி ஹெலினா, யமுனா ஆகியோா் கிராமத்திலேயே தங்கி பயிற்சி பெற்றனா்.

இதில், விவசாயிகளுடன் கலந்துரையாடல், வயல்வெளியில் நேரடி பயிற்சி, வேளாண் அலுவலா்களின் ஆலோசனை, களப் பணி, விதை தோ்வு, நல்ல விதைகளை தோ்வு செய்வதற்கான உப்பு நீரில் முட்டை மிதவை சோதனை, ஜீவாமிா்த கரைசல் தயாரிப்பு என மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்து கற்றறிந்தனா்.

துறையூா் வேளாண்மை உதவி இயக்குநா் ரவி, விதை அறிவியல் துறை பேராசிரியா் புனிதவதி ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com