புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி, மே 9: திருச்சி அருகே புதை சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வியாழக்கிழமை லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி, 41-ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் நவல்பட்டு சாலையில் புதை சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சாலை அமைப்பதற்காக கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரி வியாழக்கிழமை அந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு லாரி மீட்கப்பட்டது.

41-ஆவது வாா்டில் புதை சாக்கடை திட்டப் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு மேடும், பள்ளமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இந்த சாலையை செப்பனிடக் கோரி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனா். எனவே, இப் பகுதியில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com