மகா சிவராத்திரி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரி தினத்தையொட்டி,  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை  அதிகாலை வரை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 

மகா சிவராத்திரி தினத்தையொட்டி,  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை  அதிகாலை வரை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 
அரியலூர் அலந்துறையார் கோயில், வி.கைகாட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் பிரகன் நாயகி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விடிய விடிய நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் பனங்கூர் கிராமத்தில் உள்ள காளகஸ்தி சமேத நானாம்பிகை கோயில் ஆண்டிமடம் விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோயில், திருக்களத்தூர் திருக்கோடி வலத்தீஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் கோயில், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், திருமானூர் வைத்தியநாத சுவாமி, கீழப்பழூர், செந்துறை, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com