அரியலூர், பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 378 மனுக்கள் பெறப்பட்டன.  
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர்மு.விஜயலட்சுமி தலைமை வகித்து, கோரிக்கைகள் அடங்கிய 378 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் அ.பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
சுள்ளக்குடி மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு: சுள்ளக்குடி ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டைப் போல் நிகழாண்டும் மணல் அள்ளுவதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து, அங்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 
பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 308 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ மதுரா மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 6.50 லட்சமும், சுரா மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 5 லட்சத்துக்கான  காசோலைகள் வழங்கினார் ஆட்சியர்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், தணித்துணை ஆட்சியர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com