குடிமராமத்து பணிகள் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் பெரிய ஏரியில் பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரத் துறை சார்பில்

அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் பெரிய ஏரியில் பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரத் துறை சார்பில் ரூ. 24 லட்சத்திலும், உடையான் ஏரியில் ரூ. 14 லட்சத்திலும் நடைபெறும் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஏரியில் கரை பலப்படுத்துதல், வரத்துவாய்க்கால் தூர்வாருதல், பாசன வாய்க்கால் மதகு சரிசெய்தல் போன்ற பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் இந்தப் பணிகளை விவசாயிகளே நேரடியாகக் கண்காணிக்கலாம். பணிகள் குறித்து ஏதேனும் விவரமறிய பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை மருதையாறு வடிநிலக்கோட்ட அலுவலகத்தை அணுகலாம் என்றார். தொடர்ந்து, கல்லார் ஓடையில் ரூ. 29.50 லட்சத்தில் அணைக்கட்டு புனரமைக்கும் பணி மற்றும் கரை பலப்படுத்தும் பணி, தூர்வாரும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் டி. தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com