அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட விளாகம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கலாம் நண்பர்கள் இயக்கம்,சிங்கப்பூர் நண்பர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை புதன்கிழமை வழங்கப்பட்டது.
ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான நாற்காலிகள், பீரோ,ரேடியோ செட்,குடங்கள்,எழுது பொருள்கள்,சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை மேளா தாளத்துடன் பள்ளிக்கு சுமந்து வந்த பொதுமக்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் பொதுமக்கள் சீர்வரிசைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, சாந்திராணி, மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திஜூலி ஆகியோரிடம் வழங்கினர்.