குலமாணிக்கம் இஞ்ஞாசியார் தேவாலய தேர்பவனி

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள இஞ்ஞாசியார் தேவாலய தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள இஞ்ஞாசியார் தேவாலய தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி பங்குத் தந்தை செல்வராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, கொடியேற்றம் செய்யப்பட்டது. 
அதிலிருந்து ஒரு வாரம் திருவிழாவிற்கான நவநாள் திருப்பலி தினந்தோறும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. 
முன்னதாக, வாணவேடிக்கைகள், மேள, தாளங்களுடன் கன்னி மாதா, இஞ்ஞாசியார், வனத்து சின்னப்பர், உயிர்த்த ஏசு, மிக்கேல் சமனஸ் ஆகியோரின் சொரூபங்கள் ஐந்து தேர்களில் வைக்கப்பட்டன. 
பின்னர் தேர்கள் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக  ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலையத்தை வந்தடைந்தன. இதில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள்  மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com