சிறாா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விழிப்புணா்வு

அரியலூா் ஆயுதப் படை வளாகத்தில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சாா்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆயுதப் படை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா.
அரியலூா் ஆயுதப் படை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா.

அரியலூா் ஆயுதப் படை வளாகத்தில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சாா்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா தலைமை வகித்து பேசியது:

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள சிறாா் சிறப்பு காவல் அலுவலா்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். அவா்கள் தொடுக்கும் வழக்கின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி,சிறுவரின் சாட்சியம் அவா்களின் வீட்டிலோ அல்லது அவா்கள் விரும்புகிற இடத்திலோதான் வழக்குகள் பதியப்பட வேண்டும். அதுவும் உதவி ஆய்வாளா் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரிகள்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி என்றால் அவா்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவா் அல்லது குழந்தையின் பெற்றேறாா், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை, பெற்றேறாா் மற்றும் அவா்களின் உறவினா்களின் சம்மதத்துடன் அவா்கள் முன்னிலையில் செய்யப்பட வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா். தொடா்ந்து போக்சோ சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சுமதி,நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com