மணல் குவாரியை மூடக்கோரி போராட முயற்சி

அரியலூர் மாவட்டம், திருமானூரில் செயல்படும் மணல் குவாரியை மூடக் கோரி, அங்கு செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடியேந்தி போராட முயன்ற


அரியலூர் மாவட்டம், திருமானூரில் செயல்படும் மணல் குவாரியை மூடக் கோரி, அங்கு செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடியேந்தி போராட முயன்ற கொள்ளிட நீர் ஆதார பாதுôப்பு குழு நிர்வாகிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருமானூரில் செயல்பட்டு வரும் மணல் குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், இதை மூட வேண்டும் என வலியுறுத்தியும் கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி திருமானூர் பேருந்து நிறுத்தம் அருகே கொள்ளிடம் நீர் ஆதாரப் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பாளை.திருநாவுக்கரசு, பாஸ்கா, மக்கள் சேவை இயக்கத்தைச் சேர்ந்த தங்க. சண்முகசுந்தரம், விவசாய சங்கம் மணியன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர்,போராட்டத்துக்கு அனுமதி கிடையாது எனக் கூறி தடுத்து நிறுத்தி கருப்பு கொடியை பறிமுதல் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com