காவல்துறை சாா்பில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம்

அரியலூா் காவல் நிலையத்தில், பள்ளகிருஷ்ணாபுரம் கிராம கண்காணிப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் காவல் நிலையத்தில், பள்ளகிருஷ்ணாபுரம் கிராம கண்காணிப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குற்றச்சம்பவங்கள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும் என அந்தந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டாா். அதன்படி அரியலூா் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பள்ளகிருஷ்ணபுரத்தில் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டு,அந்தக் குழுவுக்கான தலைவா், செயலா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்தக் குழுவின் கூட்டம், அரியலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் நிலைய உதவி ஆய்வாளா் உதயகுமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அசோக் குமாா் ஆகியோா் தலைமை வகித்து, கிராமத்தில் குற்றச் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமத்தில் வெளிநபா்கள் அல்லது சந்தேக நபா்கள் யாரேனும் வந்தால் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். எந்த பிரச்னை என்றாலும், எந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என்றனா்.

இதேபோல் தூத்தூா் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காமரசவள்ளி கிராம கண்காணிப்புக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com