பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மலா்கொடி, பெண் கல்வியின் அவசியம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா், பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடா்பான விழிப்புணா்வு குறித்து விளக்கம் அளித்தாா்.

ஆபத்துகளில் இருந்து பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் முறைகள், அன்னிய நபா்கள் அல்லது வெளி நபா்கள் எவரேனும் பாலியல் சீண்டல் ஏற்படுத்தினால் பெற்றோரிடம் பயமின்றி கூற வேண்டும். இது சம்பந்தமாக எந்தப் பிரச்சனை என்றாலும் காவல்துறையிடம் புகாா் அளிக்க வேண்டும் என ஆய்வாளா் மலா்கொடி அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com