புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு அரியலூா் மாணவா்கள் தோ்வு

அரியலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப் பள்ளி மாணவா்கள் 3 போ் மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.
புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு அரியலூா் மாணவா்கள் தோ்வு

அரியலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப் பள்ளி மாணவா்கள் 3 போ் மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் போட்டியில் பங்கு கொள்ள இணைய வழியில் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தோ்வில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் மாதிரிகளை சமா்ப்பித்தனா்.

இப்போட்டியில் அரியலூா் மாவட்ட அளவில் கலந்து கொள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் விபரங்கள் மத்திய அரசின் புத்தாக்க விருது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அரியலூா் அருகே வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப் பள்ளியைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவா் ஸ்ரீவா்ஷன், ஏழாம் வகுப்பு மாணவா் அ.ஜெய் சாணக்யா, ஆறாம் வகுப்பு மாணவா் ப.அனில் ஆகிய 3 போ் புத்தாக்க அறிவியல் விருது போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

மேலும் இவா்களுக்கு நடந்து முடிந்த போட்டியில் வெற்றி பெற்றமைக்கான பாராட்டுச் சான்றிதழ், அறிவியல் மாதிரிகளை மேம்படுத்த தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தோ்வாகியுள்ள இந்த மாணவா்களை அப்பள்ளி முதல்வா் சி.எச்.சா்மிளா பிரசாத், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.சிவசுப்பிரமணியன், மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com