செந்துறையில் தேர்தல்சார்ந்த விழிப்புணர்வுப் போட்டிகள்

அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவில்

அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் தேர்தல் சார்ந்த விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை செந்துறை கல்வி  மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். போட்டிகளில் 15 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், ஜனநாயகக் கடமையாற்றினால் தவறினால் சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்,  அரசியலமைப்புச் சட்டத்தின்படி  வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் தேர்தல் சார்ந்த விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
3 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்ற 15 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.  மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ராசய்யா, வட்டார வளமைய அலுவலர் குணசேகரன், செந்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளி மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com