பிளாஸ்டிக் பயன்பாடு  தடைகுறித்த  விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , பிளாஸ்டிக் பயன்பாடுகளின்

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , பிளாஸ்டிக் பயன்பாடுகளின் தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டால், மக்கள் மற்றும் விவசாயம், இயற்கை உள்ளிட்டவை பாதிக்கப்படுவது குறித்தும்,   தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று பொருள்கள் எவை என்பது குறித்து மாணவ,மாணவிகளிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்ற மாணவ,மாணவிகள் முழக்கங்களை எழுப்பியவாறு கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று,மீண்டும் பள்ளியை அடைந்தனர்.
பள்ளித் தலைமையாசிரியை  ஹேமமலதா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் எமல்டா குயின்மேரி, முருகானந்தம், ஜாக்குலின் கவிதா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com