ஏலாக்குறிச்சி ஆலயத்தில் பொங்கல் விழா

அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தை பொங்கல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தை பொங்கல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையானதும், தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் ஒன்றானதும், வீரமாமுனிவரால் கட்டப்பட்டதுமான புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தை பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். இதில், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது, மக்கள் அனைவரும் இந்நாள் போல் எந்நாளும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜெப வழிபாட்டுடன் தொடங்கிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மண் பானையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் வைத்து புனித அடைக்கல அன்னையை வழிபட்டனர்.
தொடர்ந்து, பூண்டி மாதா பேராலயம் துணை அதிபர் ந. அல்போன்ஸ் தலைமையில் பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பங்குதந்தை சுவக்கின், உதவி பங்குதந்தைகள் லூக்காஸ், எடிசன், அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com