அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி.ஜி. வினய் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியராக இருந்த மு.விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றம் செய்து தமிழக தலைமைச்செயலர் அண்மையில் உத்தரவிட்டார். இதையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 ஆவது ஆட்சியராக திங்கள்கிழமை டி.ஜி. வினய் பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, புதிய ஆட்சியரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய ஆட்சியருக்கு அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.