இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து: எஸ்.பி

அரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ஓட்டுநர் உரிமம் தாற்காலிக ரத்து செய்யப்படும்

அரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ஓட்டுநர் உரிமம் தாற்காலிக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, வி.கைகாட்டி, செந்துறை, மீன்சுருட்டி ஆகிய சாலை சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்த வேண்டும். சிமென்ட் ஆலை நிறுவனங்கள், தங்களது லாரி ஓட்டுநர்களைக் கண்காணித்து அவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியிருந்தால் அவர்களைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிக ரத்து செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் அனைத்து சிமென்ட் ஆலை நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com