பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பித்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை ஊரக வாழ்வாதாரத் திட்ட உதவி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் வழக்குரைஞர் அன்பரசு, திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிவேல், வட்டார சமூக நல அலுவலர் ரேணுகா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் அனுப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கற்பித்தலின் அவசியம் குறித்தும், குழந்தைத் திருமணத்தை சட்டப்படி தடுத்து நிறுத்துதல், பெண்களுக்கு கட்டாய கல்வி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளித்தனர்.
மகளிர் திட்ட பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தா, அமராவதி, ராஜேஸ்வரி, சாந்தி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், மகளிர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com