தடை செய்யப்பட்ட பொருள்களை விற்ற 12 கடைகளுக்கு அபராதம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்ற 12 கடைகளுக்கு

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்ற 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனர்.
ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில்  புகையிலை பொருள் விற்கப்படுகிறதா என ஜயங்கொண்டம் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது  ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், நான்குரோடு மற்றும் கடைவீதிகளில்  உள்ள 12 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மொத்தமாக ரூ. 5,200 அபராதம் விதித்தனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
ஆய்வில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, செல்வகாந்தி,   விஜயலெட்சுமி, தூய்மை இந்தியா இயக்க பரப்புரை மேற்பார்வையாளர் இந்துமதி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com