காத்தான்குடிகாடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாரியம்மன், காளியம்மன், முனீசுவரர் ஆகிய மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் வேலைகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி காலை முதற்கால யாக சாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு யாக சாலையில் இருந்து மேளதாளங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாரியம்மன் மூலஸ்தான விமானம் மற்றும் காளியம்மன், முனீசுவரர், பரிவாரத் தெய்வங்களின் மூலஸ்தான விமானங்களுக்கு,குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை  காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுற்று வட்டார கிராம மக்கள் திரளான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக  ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com