ஜூன் 27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 25th June 2019 08:48 AM | Last Updated : 25th June 2019 08:48 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.