ஓய்வுபெற்ற அலுவலர்கள் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 09:01 AM | Last Updated : 04th March 2019 09:01 AM | அ+அ அ- |

அரியலூரில் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் அரசுப் பணிகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஆணைப்படி ஓய்வூதிதாரர்களுக்கு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் விடுபட்ட பொங்கல் பரிசு தொகையினை அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிச்சைபிள்ளை நன்றி கூறினார்.