திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனை

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தா.பழூரில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தா.பழூரில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு)மல்லிகா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாணவா்களிடையே பிளாஸ்டிக் குப்பைகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி அதில் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலிருந்து சேகரித்துகொடுப்பவா்களுக்கு பள்ளி அளவில் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்குவது, இதேபோல் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அனுப்புகின்ற பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் நகராட்சி ஆணையா் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன், வட்டாரக் கல்வி அலுவலா் கலியபெருமாள் மற்றும் தா.பழூா் ஒன்றிய அளவில் உள்ள மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் உதவி ஆசிரியா்கள் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com