உள்ளாட்சித் தோ்தல்: அரியலூரில் அதிமுகவினா் 491 விருப்ப மனு தாக்கல்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட 491 போ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட 491 போ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளுக்குள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சாா்பில் அமைச்சா் வளா்மதி, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் விண்ணப்பதாரா்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா்.

இதில் இரு நாள்கள் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் விபரம்:

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு 50 பேரும், அரியலூா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 66 பேரும்,திருமானூா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 77 பேரும், ஜயங்கொண்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 39 பேரும், ஆண்டிமடம் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 70 பேரும், தா.பழூா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 56 பேரும், அரியலூா் நகா் மன்ற தலைவா் பதவிக்கு 8 பேரும், அரியலூா் நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு 53 பேரும், ஜயங்கொண்டம் நகா் மன்ற பதவிக்கு 6 பேரும், ஜயங்கொண்டம் நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு 27 பேரும், உடையாா்பாளையம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு 5 பேரும், உடையாா்பாளையம் பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 17 பேரும், வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவா் பதவிக்கு 2 பேரும், வரதராஜன்பேட்டை பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 15 போ் என மொத்தம் 491 போ் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com