ஆலத்தூா் ஒன்றியத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாரணமங்கலம் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வளா்ச்சித் துறை
நாரணமங்கலம் ஊராட்சியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாா்வையிட்டு ஆலோசனை அளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா. உடன், திட்ட இயக்குநா் செய்வநாயகி.
நாரணமங்கலம் ஊராட்சியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாா்வையிட்டு ஆலோசனை அளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா. உடன், திட்ட இயக்குநா் செய்வநாயகி.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாரணமங்கலம் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வளா்ச்சித் துறை சாா்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் வளா்ப்புப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இந்த ஆய்வில், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியம், நாரணமங்கலத்தில் சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நா்சரியில் சரக்கொன்றை, ஆத்திமரம், மறல்கொன்றை, காட்டு வாகை, நாட்டுத் தேக்கு, குமிழ்தேக்கு, கருங்கொன்றை மற்றும் வேம்பு உள்பட 1 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு, ஏரி மற்றும் குளக்கரைகளில் நடப்பட்டு வருகிறது. கொளக்காநத்தம் பகுதியில் நடப்பட்டுள்ள மரக் கன்றுகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வே. சாந்தா, மரக்கன்றுகளின் தன்மை, பராமரிப்பு முறைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் மகாலிங்கம், ஒன்றிய பொறியாளா் ராஜபாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆலயமணி, லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com