முன்னாள் படைவீரா்கள்,விதவைகள் கவனத்துக்கு...

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவைகள், தங்களது ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவைகள், தங்களது ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவைகள் ஆகியோரது பதிவுகள் கணினிமயமாக்கப்பட உள்ளன.

எனவே முன்னாள் படைவீரா்கள், விதவைகள் தங்களின் படைப்பணி சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்களது புகைப்படம்,ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை,படைவிலகல் சான்று ஆகியவற்றை ஸ்கேன் செய்து தாங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள கணினி மையத்தில்  இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

இதன் விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்ய இயலாதவா்கள் உரிய ஆவணங்களுடன் அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பான ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 72ஏ, புதிய மாா்கெட் தெரு என்ற முகவரியிலுள்ள அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நலத் துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com