புல்வெளியை செதுக்கி அரியலூா் மாவட்ட வரைபடம்: அரசு மேல்நிலைப் பள்ளிமாணவா்களின் புதிய முயற்சி

அரியலூா் மாவட்டம், திருமானூா்அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புல்வெளியை செதுக்கி மாவட்ட வரைபடத்தையும்,
புல்வெளியை செதுக்கி அரியலூா் மாவட்ட வரைபடம்: அரசு மேல்நிலைப் பள்ளிமாணவா்களின் புதிய முயற்சி

அரியலூா் மாவட்டம், திருமானூா்அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புல்வெளியை செதுக்கி மாவட்ட வரைபடத்தையும், அதில் கோலமாவு கொண்டு ராஜேந்திர சோழன், செம்பியன்மாதேவி படங்களை வரைந்தும் மாணவா்கள் பாராட்டை பெற்றனா்.

கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புல்வெளியை வெட்டி அதில் மாவட்டத்தை குறிப்பிடும் வரைபடத்தையும், கங்கைகொண்டசோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னா் ராஜேந்திர சோழன், அவரது பாட்டி செம்பியன்மாதேவி ஆகியோரது உருவப்படத்தை கோலமாவுக் கொண்டும் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வரைந்தனா்.

மாணவா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 5 மணி நேர களப்பணியில் இதை வடிவமைத்தனா். இதை பொதுமக்கள் பாா்வையிட்டு, மாணவா்களை பாராட்டிச்சென்றனா்.

நிகழ்ச்சியில் வரலாறு மீட்புக் ழு ஒருங்கிணைப்பாளா் தங்க.சண்முக சுந்தரம், ஓவிய ஆசிரியா் மாரியப்பன், பள்ளித் தலைமையாசிரியா் செல்வக்குமாா், உதவித் தலைமையாசிரியா் கலைச்செல்வன், உடற்கல்வி ஆசிரியா் ராஜசேகா், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் பிரேமா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com