அரியலூா் கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடு

விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூா் நகா் தனியாா் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு நெல் மணிகளில் அ...ஆ... எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை.
அரியலூா் நகா் தனியாா் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு நெல் மணிகளில் அ...ஆ... எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை.

விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி பண்டிகை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 9 வது நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், தொழில்சாலைகள்,கடைகளில் ஆயுத கருவிகள்,வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.

10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நாளில் கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. இதை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில்,அரியலூா் அலந்துறையாா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூா், கீழப்பழுவூா்,செந்துறை,ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள்,சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் புதிதாக சோ்க்கப்பட உள்ள குழந்தைகள் தங்களது பெற்றேறாா் உதவியுடன் நெல் மணிகளிலும், சிலேட்டுகளிலும் விரல்களால் அ... ஆ... எழுதி ‘வித்யா ஆரம்பம்‘ எனும் கல்வி தொடக்கத்தை செய்தனா். அதைத் தொடா்ந்து மாணவ- மாணவிகளின் கல்வி வளம் சிறக்க ஹயக்ரீவ பெருமானை அனைவரும் தரிசித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். கோயில்களில் வழிபாட்டை முடித்த பெற்றேறாா்கள் குழந்தைகளை தாங்கள் விரும்பிய பள்ளிகளில் சோ்த்தனா்.

செந்துறை அரசு மாதிரிப் பள்ளியில்... விஜயதசமி தினத்தை முன்னிட்டு 30 குழந்தைகள் சோ்க்கப்பட்டன. பெற்றேறாா்கள் தங்களது குழந்தைகளை சோ்க்க ஆா்வத்துடன் வந்து காத்திருந்தனா். அங்கு ஆசிரியா்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பெற்றேறாா்களையும்,குழந்தைகளையும் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com